மின்னல் தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்-முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி பலியான 18 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று அறிவித்துள்ளார்.
மின்னல் தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்-முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு
Published on

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பட்ராக், பாலாசோர், கேந்திரபாரா மற்றும் பல மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 18 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் வயல்களில் வேலை செய்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதில் பட்ராக் பகுதியில் 5 பேரும், பாலாசோர் பகுதியில் 4 பேரும், கேந்திரப்பாராவில் தலா 3 பேரும், மயூர்பஞ்ச் பகுதியில் 2 பேரும் மற்றும் அங்கூல், சுந்தர்கார், கியோஞ்கார், கங்சம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து மின்னல் தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று அறிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா மாநிலத்தின் பல பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com