கர்நாடக சட்டசபை தேர்தல் - பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.34 கோடி பறிமுதல்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனையில் ரூ.34 கோடியே 69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தல் - பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.34 கோடி பறிமுதல்
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 34 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரத்து 954 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதவிர 1 கோடியே 77 லட்சம் மதிப்பீலான 7 கிலோ 74 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 424 தேர்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் செய்ததாக 12 ஆயித்து 537 வழக்குகளும், போஸ்டர் ஒட்டியதாக 17 ஆயிரத்து 693 வழக்குகளும், பேனர் கட்டியதாக 7 ஆயிரத்து 711 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com