ரூ.3ஆயிரம் உதவித்தொகை - மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அனுப்பர்பாளையம்;

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் மற்றும் வாவிபாளையம் பகுதி கிளை மாநாடு நடந்தது. 

மாவட்ட தலைவர் ஜெயபால், தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

மாதர் சங்கம் சார்பில் பானுமதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் மகாலிங்கம், வாலிபர் சங்கம் சார்பில் சிகாமணி ஆகியோர் பேசினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 

குடிசைமாற்று அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com