

கொழிஞ்சாம்பாறை:
கோவையில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேபேஷ்குமார் பெகராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர்களை பிடிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு உத்தரவிட்டார். போலீசார் கோழிக்கோடு பைபாஸ் சலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது ரூ.25 லட்சம் பணம் இருந்தது. பணம் குறித்து கேட்டபோது உரிய பதில் கூறவில்லை. முறையான ஆவணங்களும் இல்லை.
இதனையடுத்து ஹவாலா பணம் கடத்தி வந்ததாக கேரளா மாநிலம் பெருந்தல்மன்னாவை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 36), ரியாஸ் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.