திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கே.கே.நகர்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று இரவு வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மலேசியாவைச் சேர்ந்த கஸ்தூரி பட்டுமலை, குமரன் தனிமலை ஆகியோர் தங்களது கைப்பையில் 593 கிராம் எடை கொண்ட ரூ. 21 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள வளையல் செயின்களை மறைத்து வைத்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் குருவிகளாக செயல்பட்டு நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.இதுக்குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com