கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ரூ.200 கோடி கொள்ளையா?

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா, சசிகலா அறையில் திறந்து கிடந்த 3 சூட்கேஸில் பணம்-நகை இருந்ததா? என்பது கொள்ளையர்களிடம் நடைபெறும் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ரூ.200 கோடி கொள்ளையா?
Published on

கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது. நகைகள், பணம் இருந்ததா? போன்ற கோணத்தில் ஒரு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

அவர்கள் அந்த பங்களாவில் ஜெயலலிதா, சசிகலா தங்கும் அறைகளில் சோதனை நடத்தினர். அப்போது 3 சூட்கேஸ்கள் திறந்து கிடந்தன. அதில் பணமோ, நகைகளோ இல்லை.

அந்த சூட்கேஸ் ரூ.200 கோடி வைக்கக்கூடிய அளவுக்கு பெரியதாக இருந்தது. எனவே அதில் ரூ.200 கோடி இருப்பதை தெரிந்து கொண்ட கும்பல் அதை கொள்ளையடுத்துச் சென்றதா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது பங்களாவில் ஜெயலலிதா அறையில் இருந்து 5 கடிகாரங்களும், ஷோ கேசில் இருந்த விலை உயர்ந்த பளிங்கு கற்களால் ஆன பழமை வாய்ந்த சிலையையும் கொள்ளையடித்துச் சென்றனர். அவை சயனின் காரில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

3 பெரிய சூட்கேஸ்கள் திறந்து இருந்தன. அதில் பணம் இருந்ததா? நகை மற்றும் பொருட்கள் இருந்ததா? என்பது தெரியவில்லை. கொள்ளையர்களிடம் நடைபெறும் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com