புதுவையில் தெருவில் வசித்த மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை-பணம்

புதுவையில் தெருவில் வசித்த மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் பணமும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகையும் இருப்பதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியை படத்தில் காணலாம்
மூதாட்டியை படத்தில் காணலாம்
Published on

புதுச்சேரி:

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பருவதம் (வயது 70) என்ற மூதாட்டி புதுவை சாரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

அங்கு ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறிவிட்டார்.

பின்னர் அவர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கடையின் முன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் கடையை வாடகைக்கு விடுமாறு உத்தரவிட்டனர்.

இதனால் அந்த மூதாட்டியை கடையின் ஓரத்தில் அமர வைத்தனர். இதற்கு அந்த மூதாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் 10 ரூபாய் நோட்டுக்கள், சில்லரைகள் என மொத்தம் ரூ.15 ஆயிரம் மற்றும் தங்க கம்மல், அவரது கழுத்தில் தங்க செயின் சேர்ந்து 4 பவுன் இருந்தது.

மேலும் அவரிடம் இருந்த வங்கி கணக்கு புத்தகத்தை ஆய்வு செய்ததில் அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் முதியோர் இல்லத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த மூதாட்டியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com