ஆசிரியர் வேலைவாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி- கல்லூரி பேராசிரியர் கைது

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சோழிங்கநல்லூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலை. இவர் திருவான்மியூர் பகுதியில் 5 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் பச்சையப்பா கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை ஈ.சி.ஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தனர். கல்லூரி பேராசிரியர் திருமலை ஒரு வருடத்திற்கு முன்பு மணிகண்டன், ரேணுகா தேவி ஆகியோரிடம் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக மொத்தமாக ரூ. 15 லட்சம் ரொக்க பணமாக பெற்றுள்ளார், அதற்கு நம்பிக்கை சான்றுகளாக ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் வீதம் இரண்டு காசோலை வழங்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக வேலைவாங்கிக் கொடுக்காமல் திருமலை ஏமாற்றி வந்தார்.

மேலும் அவர் கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியது. இதுபற்றி மணிகண்டன், ரேணுகாதேவி ஆகிய இருவரும் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட திருமலையை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com