கோவையில் அதிக ஒலி எழுப்பிய 8 இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்

அதிக ஒலி எழுப்பிய 8 இரு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் (கோப்புப்படம்)
நீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on

கோவை:

கோவையில் போக்குவரத்து போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக செல்பவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள், அதிக வெளிச்சம் கொண்ட எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த வாரம் போக்குவரத்து போலீசார் கோவை மாநகர் பகுதி முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி.விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள், அதிக ஒலி எழுப்பிய இருசக்கர வாகனங்களை பிடித்து சோதனை செய்தனர்.

பின்னர் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் மட்டும் விதித்து உடனே விடுவித்தனர். ஆனால் 35 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதில் அதிக ஒலி எழுப்பியதாக 8 மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் மீது கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அதிக ஒலி எழுப்பிய 8 இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com