செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செம்மரக்கட்டைகள்
செம்மரக்கட்டைகள்
Published on

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் தனலட்சுமி நகரில் உள்ள ஒரு தனியார் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு துறை போலீசார் மற்றும் செங்குன்றம் போலீசார் குடோனில் சோதனை நடத்த சென்றனர். ஆனால் குடோன் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து குடோனின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரூ.10 கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோனின் உரிமையாளர் யார்? செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com