டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் 158 ரன்கள் சேர்ப்பு: கொல்கத்தா சேஸிங்  செய்யுமா?

டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் 158 ரன்கள் சேர்ப்பு: கொல்கத்தா சேஸிங் செய்யுமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
Published on

ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி விராட் கோலி, கிறிஸ்கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ்கெய்ல் அவுட் ஆனார். அவர் காம்பீரிடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். மறுமுனையில் விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 10 ரன்னில் வெளியேறினார். மீண்டும் தொடக்க வீரர்கள் சொதப்ப ராயல் சேலஞ்சர்ஸ் 34 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மந்தீப் சிங் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 41 பந்தில் அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட், கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் விளாசி 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் எடுக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com