மதுரை சம்மட்டிபுரத்தில் ரவுடி வெட்டிக்கொலை- ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

மதுரை சம்மட்டிபுரத்தில் ரவுடியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை சம்மட்டிபுரத்தில் ரவுடி வெட்டிக்கொலை- ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
Published on

மதுரை:

மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் செம்பருத்தி தெருவைச் சேர்ந்தவர் மோகன் மகன் முத்துக்குமார் (வயது23), கட்டுமான தொழிலாளி. இவர் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்பட 5 வழக்குகள் நிலு வையில் உள்ளன.

இந்த நிலையில் முத்துக்குமார் நேற்றிரவு சம்மட்டி புரம் முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முத்துக்குமாரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணையில் முத்துக்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டபிரபு, அவரது நண்பர்கள் செல்லப்பாண்டி, ஜெயபாண்டி ஆகியோர் முன்விரோதத்தில் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com