என்கவுண்டர் நடப்பதற்கு முன் வக்கீலை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்த ரவுடிகள்

என்கவுண்டர் நடப்பதற்கு முன் கருவேலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த வக்கீல் சித்து முருகனை தாக்கி மோட்டார் சைக்கிளை ரவுடிகள் பறித்துக்கொண்டு தப்பி உள்ளனர்.
என்கவுண்டர் நடப்பதற்கு முன் வக்கீலை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்த ரவுடிகள்
Published on

பேரையூர்:

மதுரை சிக்கந்தர் சாவடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட மோதலில் 2 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கொலை செய்யப்பட்ட 2 ரவுடிகளும் நேற்று காலையில் வக்கீலை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றது தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருமங்கலம் அருகே உள்ள சம்பங்குளத்தைச் சேர்ந்தவர் வக்கீல் சித்து முருகன். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கருவேலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் தாக்கியுள்ளனர். பின்னர் சித்து முருகனின் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com