

கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள சோமனூரில் உள்ள பேருந்து நிலைய மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் போலீசாரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பேருந்து நிலையத்தின் தூண் மீது நகர பேருந்து மோதியதில் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.