காதல் மனைவியை மீட்டு தர வேண்டும் - கணவர் உறவினர்களுடன் வந்து மனு

பெற்றோரால் கடத்தப்பட்ட காதல் மனைவியை மீட்டு தர கோரி கணவர் உறவினர்களுடன் வந்து ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் காவலிபாளையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது26). தனது உறவினர்களுடன் ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஆயிகவுண்டம் பாளையத்தை சேர்ந்த மெளனிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தங்களுக்கு பெண் வீட்டாரால் இடையூறு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு தர கோரி தஞ்சம் அடைந்தோம். இரு குடும்பத்தாரை அழைத்து போலீசார் சமாதானம் பேசினர்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மெளனிகாவின் உறவினர் போன் செய்தார். மெளனிகாவின் தந்தை ரகுபதி உடல் நலக்குறைவால் பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறி அழைத்தார்.

இதை நம்பி நானும், என் மனைவியும் மருத்துவமனை சென்றோம். வழியில் மாமனார், சித்தப்பா குடும்பத்தினர் சேர்ந்து என்னை தாக்கி, எனது மனைவியின் நகையை பறித்து, அவளை கடத்தி சென்றனர்.

இது பற்றி பெருந்துறை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனது மனைவியை மீட்பதுடன், கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com