விம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரர், பெர்டிச் 4-வது சுற்றுக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் லீக் ஆட்டங்களில் ரோஜர் பெடரர் மற்றும் பெர்டிச் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரர், பெர்டிச் 4-வது சுற்றுக்கு தகுதி
Published on

லண்டன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 4-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த மிச்சாவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 7-6 (7-3), 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெடரர் 4-வது சுற்றில் 13-ம் நிலை வீரரான டிமிட்ரோவை (பல்கேரியா) சந்திக்கிறார்.

இதேபோல 8-ம் நிலை வீரரான டொமினிக் தியம் (‘ஆஸ்திரியா) 7-5, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் டொனால்டுசன்னை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான பெர்டிச் (செக்குடியரசு) 6-3, 6-4, 6-3 என்ற கணக்கில் டேவிட் பெரரை (ஸ்பெயின்) தோற்றகடித்தார்.

மற்ற ஆட்டங்களில் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), 6-ம் நிலை வீரரான ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கி (டென்மார்க்) 3-வது சுற்றில் எஸ்டோனியாவை சேர்ந்த அனெட்டை 3-6, 7-6 (7-3), 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனையாகன கெர்பர் (ஜெர்மனி), ரட்வன்ஸ்கா (போலந்து), முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இன்று ஓய்வு நாளாகும். நாளை 7-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com