ராபர்ட் பயாஸ் மனைவி பெயர் தடை பட்டியலில் உள்ளது- சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

ராபர்ட் பயாசின் மனைவி பெயர் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராபர்ட் பயாஸ்
ராபர்ட் பயாஸ்
Published on

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், தன் மனைவி இலங்கையில் இருந்து இந்தியா வருவதற்கு விசா வழங்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராபர்ட் பயாசின் மனைவி பிரேமாவின் பெயர் இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு விசா வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பயஸ் மனைவி மீதான குற்ற ஆவணங்களின் படி 2018ல் அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com