வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம், அம்மாப்பேட்டை, மாரி உடையன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் நேற்று பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் நுழைவு வாயிலில் பஸ் வந்தபோது, சீனிவாசன் சட்டைப்பையில் இருந்த பணத்தை 2 பேர் நைசாக திருடியதாக தெரிகிறது. பயணிகள், இவர்கள் இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் சாம்பளி மாவட்டம் தனகுடோரா பகுதியை சேர்ந்த அர்ஜூன் அமர் குமார் வர்மா (30), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (30) ஆகியோர் என்பதும், இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி என 11 வழக்குகள் உள்ளன என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com