தொடர் கொள்ளை: ஆட்டோ டிரைவர் கைது

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கொளத்தூர்:

சென்னை ராஜமங்கலம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் யானைக் கவுனி கல்யாணபுரத்தை சேர்ந்த சோனைராஜ் (39) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் இரவு நேரங்களில் புறநகர் பகுதிகளான ராஜமங்கலம், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சோனைராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com