நகை-பணத்துக்காக தம்பதியை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்

கரூர் அருகே நகை-பணத்துக்காக தம்பதியை கடத்திச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கரூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் மன்னபுரம் தாசில்நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவரது மனைவி வசந்தமணி (45). இவர்களது மகன் பாஸ்கர். இவர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக செல்வராஜ், வசந்தமணி ஆகியோர் நேற்று காரில் கரூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். காலையில் சென்றவர்கள் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவர்களது மகன் பாஸ்கர், பெற்றோரின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் உறவினர்கள் கரூர் சென்று 2பேரையும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தான் தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் செல்வராஜ், வசந்தமணி ஆகிய 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போதுஅவர்கள் சென்ற கார் திருச்சி மாவட்டம் சுக்காளியூர் பகுதியில்உள்ள ஒரு தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது காரில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் மர்மநபர்கள் நகை- பணத்துக்காக தம்பதியை கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com