ஆப்கானிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
ஆப்கானிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெராத் மாகாணத்தில் வேலை செய்வதற்காக ஒரு வாகனத்தில் 10-க்கு மேற்பட்டோர் இன்று பயணம் செய்து கொண்டிருந்தனர்.

குல்ரான் மாவட்டம் அருகே வந்த போது, அந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதலில் அதில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே  உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், ஹெராத் மாகாணத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com