திட்டக்குடி அருகே நடுரோட்டில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்

திட்டக்குடி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திட்டக்குடி அருகே நடுரோட்டில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்
Published on

பெண்ணாடம்:

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 49) இவர் தனது மனைவி கண்ணகி(37),மகன் சூரியக்குமார்(8). ஆகியோருடன் நேற்று சென்னையிலிருந்து திருச்செங்கோட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை தன்ராஜ் ஓட்டி வந்தார்.

இந்த கார் நேற்று மதியம் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த வெங்கனூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று தன்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே காரில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து கொண்டு காரை விட்டு வேகமாக வெளியேறினர். இந்த விபத்தில் தன்ராஜ் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

விபத்து குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யபட்டது. இதையடுத்து போலீசாரும் திட்டக்குடி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசாமாகியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார் எதனால் தீப்பிடித்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com