மணப்பாறையில் நடுரோட்டில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

மணப்பாறையில் நடுரோட்டில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து
விபத்து
Published on

மணப்பாறை:

புதுக்கோட்டையில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி நேற்றிரவு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் 20 பயணிகள் இருந்தனர். பஸ்சை யுவராஜ் (வயது 24) என்பவர் ஓட்டினார்.

இந்த நிலையில் மணப்பாறை ஆண்டியப்பட்டி பகுதியில் செல்லும்  போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் , சாலையின் நடுவே உள்ள  தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த  20 பயணிகளும் காய மடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந் ததும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்தது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com