கோவையில் விபத்தில் பெண் ஐ.டி. ஊழியர் பலி

கோவையில் இன்று காலை விபத்தில் பெண் ஐ.டி. ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

கோவை:

கோவை சாய்பாபா காலனி என்.பி.சி. ஆபீஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பூர்ணிமா கனி(வயது22).

இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் இன்று காலை 11 மணியளவில் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கணபதிக்கு மொபட்டில் சென்றார்.

சரவணம்பட்டி செக்போஸ்ட் அருகே வந்தபோது பூர்ணிமா கனி நிலைதடுமாறி சாலையின் வலது புறத்தில் கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் பூர்ணிமா கனி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com