அதிவேக வழித்தடங்களில் சுவர் எழுப்பி விளம்பர வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்

அதிவேக வழித்தடங்களில் இருபுறமும் சுவர் எழுப்பி அதில் விளம்பரங்கள் செய்து அதன்மூலம் வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம் தீட்டி வருகிறது. #IndianRaiways
அதிவேக வழித்தடங்களில் சுவர் எழுப்பி விளம்பர வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்
Published on

புதுடெல்லி:

இந்திய ரெயில்வே பல்வேறு வழிகளில் வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. செலவினங்களை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப்படுத்தவும் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அதிவிரைவு வழித்தடங்களில் தண்டவாளத்தின் இருபுறமும் பாதுகாப்புக்காக சுவர் எழுப்ப ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த சுவரில் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பதன் மூலம் வருவாயை ஈட்டலாம் என ரெயில்வே திட்டமிட்டுள்ளது. 7 முதல் 8 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுவர்கள் தண்டவாளத்தில் ரெயில் செல்லும் போது ஏற்படும் சப்தத்தையும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை - டெல்லி அதிவேக தடத்தில் இந்த புதிய திட்டம் அமல் படுத்தப்படலாம் என தெரிகிறது. குடியிருப்பு பகுதியில் அமையும் சுவர்களில் செய்யப்படும் விளம்பரத்திற்கு அதிக கட்டணமும் மற்ற பகுதிகளுக்கு சாதாரண கட்டணமும் நிர்ணயம் செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com