சதாப்தி ரெயில்களில், இனிமேல் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான்

சதாப்தி ரெயில்களில் பயண நேர வித்தியாசம் இல்லாமல், எல்லா பயணிகளுக்கும் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதாப்தி ரெயில்
சதாப்தி ரெயில்
Published on

புதுடெல்லி:

தற்போது, சதாப்தி ரெயில்களில் 5 மணி நேரம்வரை பயணம் செய்பவர்களுக்கு தலா 500 மி.லி. தண்ணீர் பாட்டிலும், அதற்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனிமேல், பயண நேர வித்தியாசம் இல்லாமல், எல்லா பயணிகளுக்கும் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான் வழங்கப்படும்.

ரெயில்வே வாரியம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு லிட்டர் பாட்டில்களில் உள்ள தண்ணீர் வீணடிக்கப்படுவது தெரிய வந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் தண்ணீர் பாட்டில்களை பயணிகள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com