அம்மாவின் நம்பிக்கைக்குரிய மதுசூதனனுக்கு வாக்களியுங்கள்: ரத்தினவேல் எம்.பி.

அம்மாவின் நம்பிக்கைக்குரிய மதுசூதனனுக்கு வாக்களியுங்கள்: ரத்தினவேல் எம்.பி.

திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
Published on

சென்னை:

திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தின வேல் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ரத்தினவேல் எம்.பி., கோவை ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் ஜீவா நகரில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

பிரசாரத்தின் போது ரத்தினவேல் எம்.பி., அம்மாவின் நம்பிக்கைக்குரிய உண்மை தொண்டன் அண்ணன் மதுசூதனன், மண் ணின் மைந்தரான அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அவரால் மட்டுமே அம்மா விட்டு சென்ற பணிகளை தொடர முடியும். அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் தொகுதி மக்களுக்கு பெற்று தருவார். அம்மாவின் வெற்றி சின்னமாம் இரட்டை இலையில் வாக்களித்து மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள் என்றார். அவருடன் சந்திரசேகரன் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்திராகாந்தி, வெங்கடாசலம், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் ராவணன், சூப்பர் நடேசன், சேனை செல்வம், வெங்கடாசலம், அழகாபுரி செல்வராஜ், சேது, ராஜாராம், எஸ்.பி. பாண்டியன், ராமமூர்த்தி, செக்கர் ஜெயராமன், பொதுக் குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் பலர் சென்று வாக்கு சேகரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com