

சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பார்வையாளர்களாக மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இதில் குமார் பிரணவ், ஷீல் அசீஸ், டி.கே.ஜகோரியா ஆகியோர் செலவின பார்வையாளர்களாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 7-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகை தருவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
குமார் பிரணவ் இந்திய ரெயில்வே கணக்கு துறையிலும், ஷீல் அசீஸ் இந்திய ராணுவ கணக்கு துறையிலும், டி.கே.ஜகோரியா இந்திய வருவாய்த்துறையிலும் மூத்த அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள்.