யுவராஜ், ரெய்னா கலந்த கலவை ரிஷப் பந்த்: சச்சின் புகழாரம்

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா இருவரும் கலந்த கலவை ரிஷப் பந்த் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
யுவராஜ், ரெய்னா கலந்த கலவை ரிஷப் பந்த்: சச்சின் புகழாரம்
Published on

நடந்து முடிந்த 10-வது ஐ.பி.எல். தொடரில் பல இளம் நட்சத்திரங்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளை வெளிப்படுத்தினர். அதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பில் விளையாடிய 19 வயதான ரிஷப் பந்த் குறிப்பிடத்தக்கவர்.

இந்த ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய பந்த், 2 அரைசதம் உட்பட 366 ரன்களை குவித்தார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் குஜராத் அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா இருவரும் கலந்த கலவை ரிஷப் பந்த் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் கூறுகையில், அவர் சிறப்பு திறன் வாய்ந்தவர். என்னப் பொறுத்தவரையில் யுவராஜ், ரெய்னா இருவரும் சேர்ந்த கலவையாக அவர் தெரிகிறார்” என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com