பாளையில் அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை- ரூ.14 லட்சம் கொள்ளை

அரிசி ஆலை அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் 80 பவுன் நகை மற்றும் ரூ.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையில் அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை- ரூ.14 லட்சம் கொள்ளை
Published on

நெல்லை:

பாளை திம்மராஜபுரம் கோட்டூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவர் அப்பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் தொழில் வி‌ஷயமாக இன்று காலை வெளியூர் சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

அந்த வேளையில் மர்ம நபர்கள் பாண்டி வீட்டிற்குள் மாடி வழியாக ஏறி உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 80 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 லட்சம் ரொக்க பணத்தையும் திருடினர். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம்.

இன்று காலை வீட்டிற்கு வந்த பாண்டி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி பாளை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com