ரியா சக்ரபோர்த்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்: மீண்டும் சம்மன்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி
Published on

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று அவரது தந்தை பீகார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்தது.

அதனடிப்படையில் மும்பையில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபோர்த்திதான் கொலை செய்தார் என்று சுஷாந்த் சிங் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவரை நோக்கியே முழு விசாரணையும் சென்று கொண்டிருக்கிறது.

சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சிபிஐ அலுவலகம் சென்றார் ரியா சக்ரபோர்த்தி.

அதிகாரிகள் காலையில் இருந்து மாலை சுமார் 10 மணி வரை கேள்விகள் கேட்டுள்ளனர். அத்துடன் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். ரியா சக்ரபோர்த்தியின் வாக்குமூலத்தை சிபிஐ விசாரணை அதிகாரி நுபுர் பிரசாத் பதிவு செய்துள்ளார்.

ரியா சக்ரபோர்த்தியிடம்,

1. சுஷாந்த் சிங் ராஜ்த்தின் மரணம் குறித்து தகவல் தெரிவித்தது யார்?. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

2. மரணம் குறித்து கேள்விப்பட்ட பின் சுஷாந்த் சிங்கின் பந்த்ரா வீட்டிற்கு சென்றீர்களா? அப்படி இல்லை என்றால் ஏன், எப்போது, எங்கே அவருடைய உடலை பார்த்தீர்கள்?

3. ஜூன் 8-ந்தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் இருந்து ஏன் வெளியேறினீர்கள்?

4. ஏதாவது சண்டை ஏற்பட்டு வெளியேறினீர்களா?

5. வெளியேறிய பின்னர் ராஜ்புத் உடன் ஜூன் 9 முதல் ஜூன் 14-ந்தேதி வரை ஏதாவது தொடர்பு கொண்டீர்களா?. அப்படி இருந்தால் என்ன? இல்லையெனில் ஏன்? உள்பட முக்கிய 10 கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com