மணிப்பூரில் ஆதரவை வாபஸ் பெற்ற கூட்டணி கட்சி: பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்தது

மணிப்பூரில் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்து வந்த தேசிய மக்கள் கட்சி (NPP) வாபஸ் பெற்றதால், மெஜாரிட்டியை இழந்து ஆட்சிய இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மணிப்பூர் பா.ஜனதா எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
மணிப்பூர் பா.ஜனதா எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
Published on

மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களை பிடித்தது. பா.ஜனதா 21 இடங்களில்தான் வெற்றி பெற்றது.

ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏ-க்கள் ஆதரவு வேண்டிய நிலையில் தேசிய மக்கள் கட்சி (NPP-4 இடங்கள்), நாகா மக்கள் முன்னிலை (NPF-4), லோக் ஜனசக்தி (LJP-1), சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர், டிஎம்சி எம்.எல்.ஏ. ஒருவர் ஆகிய கூட்டணியுடன் 32 எம்எம்ஏ-க்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியமைத்தது.

பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் இன்று தேசிய மக்கள் கட்சியின் நான்கு எம்எல்ஏ-க்கள் பா.ஜனதாவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றனர். அதேபோல் டிஎம்சி, சுயேட்சை எம்எல்ஏ-க்களும் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்துள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வ் ஓ இபோபி சிங் ஆகியோர் இணைந்து ஆட்சியமைக்க கோர உள்ளனர். ஏற்கனவே பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் மூன்று பேர் ராஜினாமா செய்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com