தாராபுரத்தில் வருவாய் அலுவலர் கணவர் தற்கொலை

தாராபுரத்தில் வருவாய் அலுவலர் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

தாராபுரம்:

தாராபுரம் பார்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு (43). கார் டிரைவர். இவரது மனைவி சுதா. வருவாய் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வேலு கோபித்து கொண்டு தாராபுரம் உப்புத்துறை பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

அவரது தாய் கடந்த 2 நாட்களாக வெளியூர் சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த வேலு வீட்டின் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை வேலு வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர் வேலு வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் மின் விசிறியில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேலு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com