பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

பொள்ளாச்சி:

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேதுராமன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவை தொகையை வழங்க வேண்டும், பென்சன் சீராய்வு குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சேமநல நிதியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் பழனிச்சாமி, மோகன்குமார், வேலுசாமி, கங்காதரன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com