

வாழப்பாடி:
வாழப்பாடி அய்யாக்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ஆசிரியை சுலோச்சனா. அரசுப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவரது வீட்டில் நேற்று பகல் 12 மணியளவில், தண்ணீர் சுட வைப்பதற்காக ஹீட்டர் போட்டுள்ளனர்.
அதிக மின் அழுத்தத்தால் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக் கொண்டது. அந்த தீ விபத்தில், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.
அது குறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து, வீட்டில் இருந்த மற்ற பொருட்களை காப்பாற்றினர். மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். #tamilnews