சத்துணவு ஊழியர் தீக்குளித்து தற்கொலை

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சத்துணவு ஊழியர் தீக்குளித்து தற்கொலை
Published on

கோவை:

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் ராமதேவர் வீதியை சேர்ந்தவர் பாண்டியனின் மனைவி ஈஸ்வரி (வயது 69). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். இவரது மகன் பொள்ளாச்சியில் வசித்து வருகிறார். ஈஸ்வரி தனது அண்ணனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஈஸ்வரி திடீரென தீ குளித்தார். உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வருவதாக போலீசார் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com