ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ராஜேஸ்வரன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

கோவை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை தமிழக அரசு நியமித்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் கோவையில் 3 நாட்கள் விசாரணை நடத்திய அவர் 2-வது கட்ட விசாரணையை நேற்று தொடங்கினார். நாளை வரை 3 நாட்கள் இந்த விசாரணை நடைபெறும் என்றும், இதில் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ராஜேஸ்வரன் லட்சுமி மில் சந்திப்பு அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி விசாரணை நடத்தினார். அங்கேயே இரவில் தங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com