ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

திருவள்ளூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி, கூட்டுறவு வங்கியில் ஓட்டுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் மனைவி, மகளுடன் வீட்டின் மேல் தளத்தில் படுத்து தூங்கினார். காலை எழுந்து பார்த்த போது வீட்டின் கீழ்தளத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து லூர்து சாமி மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com