ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 25 பவுன் நகைகள் திருடு போனது.
ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காந்தி நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.

இதையறிந்த, கொள்ளை கும்பல், நேற்று இரவு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் சம்பத் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மதியரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com