மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை

மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 25½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை
Published on

மதுரை:

மதுரை அண்ணாநகர் குருவிக்காரன்சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது68), ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

இவர், தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு நடை பயிற்சிக்கு சென்றார். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜை அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் வைத்திருந்த 25½ பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிம் கொள்ளை போய் இருப்பதாக சீனிவாசன் தெரிவித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

மதுரை பொன்மேனி நகரைச் சேர்ந்தவர் ஜவகர் லால் நேரு. இவரது மனைவி ஜெயபாலாஜி. இவர் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் பிரிவில் ஊழியராக உள்ளார்.

நேற்று வெளியூர் சென்று திரும்பிய இவர், பொன்மேனி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் ஜெயபாலாஜி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com