நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதிய 200 ரூபாய் நோட்டு நாளை முதல் புழக்கத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 200 ரூபாய் நோட்டு மாதிரி வெளியிட்டுள்ளது.
நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது ரூ.50, ரூ.100 நோட்டுகள் குறைவான புழக்கத்தில் இருந்ததால் ரூ.2,000 நோட்டை மாற்றுவதில் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினர். 

இதன்காரணமாக அதிக அளவில் ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. அப்போதும் கூட ரூ.2,000 நோட்டை மாற்றுவதற்கு ஏற்ப குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை தகுந்த புழக்கத்தில் இல்லை.

இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு ரூ.200 நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டு நாளை முதல் புழக்கத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 200 ரூபாய் நோட்டு மாதிரி வெளியிட்டுள்ளது.

புதிய ரூ.200 நோட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதில் நாட்டின் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் சாஞ்சி தூபி சின்னம் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com