அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தாராபுரம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர்அய்யப்பன் தலைமை வகித்தார்.

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.

மேலும் 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இளங்கோ, சங்க நிர்வாகிகள் மேகலிங்கம், தில்லையப்பன், மணிமொழி, வெங்கிடுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com