ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா: கலெக்டர் நடராஜன் கொடியேற்றினார்

குடியரசு தினவிழாவில் கொடியேற்றி வைத்த கலெக்டர் நடராஜன், ரூ. 1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா: கலெக்டர் நடராஜன் கொடியேற்றினார்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் குடியரசு தின விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் நடராஜன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து புறா மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு கலெக்டர் நடராஜன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய 32 போலீ சாருக்கு தமிழக முதல்-அமைச்சர் பதக்கத்தினையும், 40 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளை சோந்த சிறப்பாக பணியாற்றிய 83 அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 1 கோடியே 34 ஆயிரத்து 621 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 96 பயனாளிகளுக்கு கலெக்டர் நடராஜன் வழங்கினார்.

பின்னர் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வெள்ளைத்துரை, இன்ப மணி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி.

கோட்டாட்சியர் பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மக்கள் தொடர்பு அதிகாரிகள் அண்ணாதுரை மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள், மாணவ மாணவிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பின் அலுவலர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com