

மும்பை:
ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வ லுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்துள்ளார்.
மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே டிஆர்பி முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அர்னாப் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார்.
அலிபாக் காவல் நிலையத்தில் நடைபெறும் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.