பெங்களூரு மெட்ரோ பலகைகளில் இனி இந்தி இருக்காது: மத்திய அரசுக்கு சித்தராமையா கடிதம்

கர்நாடக மாநிலத்தின் நம்ம மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி மொழியை நீக்குவது தொடர்பாக என மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு மெட்ரோ பலகைகளில் இனி இந்தி இருக்காது: மத்திய அரசுக்கு சித்தராமையா கடிதம்
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தின் நம்ம மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மும்மொழி உள்ளது. 

இந்நிலையில், நம்ம மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இருந்து இந்தி மொழியை நீக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் தாங்களாகவே பெயர் பலகையில் இருந்து இந்தி மொழியை அகற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர் போராட்டங்கள் காரணமாக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதனையடுத்து, கொச்சி மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பயன்படுத்தப்படும் மொழிக் கொள்கை குறித்து சர்வே எடுக்க உத்தவிட்டார். 

விவரங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த 12ஆம் தேதி மாநில அரசிடம் பெங்களூர் மெட்ரோ நிர்வாக அளித்தது. சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுவதும், கொச்சி மெட்ரோ ஸ்டேஷன் ரெயில் நிலையங்களில் மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், நம்ம மெட்ரோ ரெயில் நிலைய பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி மொழியை நீக்கும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெங்களூர் மெட்ரோ நிர்வாகத்திற்கு, இந்தி மொழி அல்லாமல் புதிய பலகைகளை தயாரிக்குமாறு பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com