ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பீச்சர்போன் தயாரிக்கும் இன்டெக்ஸ்

இந்தியாவில் 4ஜி பீச்சர்போன்களை தயாரிக்க இன்டெக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் பீச்சர் போன் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பீச்சர்போன் தயாரிக்கும் இன்டெக்ஸ்
Published on

புதுடெல்லி:  

இந்தியாவில் 4ஜி பீச்சர்போன்களை தயாரிக்க ரிலையன்ஸ் ஜியோ இன்டெக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்டு மாதம் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய பீச்சர்போன் மலிவு விலையில் வெளியாகும் என்பதால் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.  

ஜியோ ஏற்கனவே நிர்ணயம் செய்த தொகையில் இன்டெக்ஸ் நிறுவனம் பீச்சர் போன்களை தயாரிக்கும். இவற்றை ஜியோ தனது பிரான்டிங் மூலம் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் என இன்டெக்ஸ் நிறுவன வியாபார பிரிவு தலைவர் நிதி மார்கண்டே தெரிவித்தார். 

இந்த காலாண்டிற்குள் புதிய பீச்சர்போனினை வெளியிட்டு அவற்றை தனியை விற்பனை செய்ய மாட்டோம், இது தொடர்பான பேச்சுவார்த்தை ஜியோவுடன் நடைபெற்று வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக விரைவில் ஜியோ பீச்சர் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இவற்றை தயாரிக்க மேலும் சில சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ இதுவரை மட்டும் 18-20 மில்லியன் 4ஜி வோல்ட்இ பீச்சர்போன்களை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கென சீனாவை சேர்ந்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதேபோல் மைக்ரோமேக்ஸ், லாவா உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஜியோ பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com