

கோவை:
கோவை ரெயில் நிலைய பார்சல் அலுவலக சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த கிளார்க் அறை உதவியாளர் காரமடையை சேர்ந்த பவளம் மணி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லோடு மேன் இப்ராகிம் ஆகியோர் பலியானார்கள்.பலியான 2 பேரின் உடல்களும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு இருவரது உறவினர்களும் திரண்டனர்.பலியான பவளம் மணி மனைவி சுமதி, இப்ராகிம் மனைவி நிஷா மற்றும் குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் பிரேத பரிசோதனை அறையை முற்றுகையிட்டனர்.