

வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எட்டியம்மாள். இவரது கணவர் பெருமாள் (வயது 75). இவரது நிலத்தின் அருகே உறவினரான மூர்த்தி (40) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
பெருமாளின் விவசாய நிலத்தை கடந்ததுதான் மூர்த்தியின் நிலத்திற்கு செல்ல வேண்டும் என கூறப்படுகிறது. கடந்த 14-ந் தேதி பெருமாள் அவரது நிலத்தில் வழியை மறித்ததாக தெரிகிறது.
அப்போது நிலத்திற்கு சென்ற மூர்த்தி இதுபற்றி பெருமாளிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் நடந்த வாக்குவாதத்தில் பெருமாளை மூர்த்தி சரமாரியாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து பெருமாள் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ் பாபு வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார்.