வாலிபருடன் தொடர்பு: மனைவி மாயமானதாக கணவர் புகார்

மனைவி மாயமானதாக போலீசில் வாலிபர் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
வாலிபருடன் தொடர்பு: மனைவி மாயமானதாக கணவர் புகார்
Published on

விருதுநகர்:

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வினோத் சிங். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மெபேல் அனிதா (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை.

கடந்த 7-ந் தேதி மெபேல் அனிதா, நாகர்கோவிலில் உள்ள தனது தாய் வீட்டிற்குப் புறப்பட்டார். அவரை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு வினோத் சிங் பஸ் ஏற்றி விட்டார்.

மதியம் செல்போனில் கேட்டபோது நாகர்கோவிலில் இறங்கி விட்டதாக மெபேல் அனிதா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை என வினோத்சிங்குக்கு தகவல் கிடைத்தது. மனைவி மாயமான தகவல் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மெபேல் அனிதா சென்ற பஸ்சின் கண்டக்டரை தொடர்பு கொண்டு, வினோத்சிங் விசாரித்தார். அப்போது விருதுநகர் ஆற்றுப்பாலம் நிறுத்தத்தில் மெபேல் அனிதா இறங்கி விட்டதாக கண்டக்டர் கூறினார்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜராஜனிடம், வினோத்சிங் புகார் மனு கொடுத்தார். அதில், விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த வில்சன் என்பவர், சர்ச்சுக்கு வரும்போது மெபேல் அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் மனைவி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனு குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மெபேல் அனிதாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com