வெம்பக்கோட்டை பகுதியில் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு

வெம்பக்கோட்டை பகுதியில் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் நிலை உள்ளது.
வெம்பக்கோட்டை பகுதியில் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு
Published on

தாயில்பட்டி:

ரூபாய் நோட்டு பயன்பாட்டில் அவ்வப்போது ஏதாவது ஒரு வதந்தி கிளம்பி அனைவரையும் அல்லல் படுத்தும். இதில் முத்தாய்ப்பாக ரூ.10 நாணயம் செல்லாது என்று பரவிய தகவல் நீண்ட நாட்களாக பெரும் சிரமப்படுத்தியது. எல்லோரும் நாணயத்தை வாங்க மறுத்த நிலையில் வங்கிகளும் ரூ.10 நாணயம் செல்லும் அதை வங்கிக்கு கொண்டுவருவதை விட புழக்கத்தில் விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இத்தகைய சூழலில் வெம்பக்கோட்டை பகுதியில் சமீபகாலமாக 5 ரூபாய் நோட்டுகளை கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாங்க மறுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. பொதுமக்களும் மற்றவர்களிடம் இருந்து நோட்டுகளை வாங்காமல் நாணயமாக கொடுத்து விடுங்கள் என்று கூறுகின்றனர். இதேபோல அரசு பஸ் கண்டக்டர்களும் இந்த நோட்டுகளை வாங்குவதில்லை. அவர்களிடம் கொடுத்தால், மற்ற பயணிகள் வேண்டாம் என்று ரூ.5 நோட்டை ஒதுக்குவதால் தம்மாலும் வாங்க இயலாது என்று கூறுகின்றனர்.

தற்போது மற்ற ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ள நிலையில், 5 ரூபாய் நோட்டுகள் மட்டும் பழைய தாள்களே புழக்கத்தில் உள்ளன. இதனால் அதை ஒருவர் ஒதுக்க அதுவே எங்கும் பரவிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர புதிய நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com